Iniiiya Natkal
நண்பர்களுடன் இருக்கும் நேரம்
கரைத்துவிடும் மனதின் பாரம்
மீண்டும் பெறாத காலம்
என் கல்லூரி வாழ்வில் கிடைத்த இன்பம்!!!!!!!
கல்லூரியின் கட்டிட அமைப்பு
என் கண்களுக்கு விருந்து
நான்கு வருடமும் ரசித்து
இன்னும் குறையவில்லை அதன் அழகு!!!!!!!
பேராசிரியர் நடத்திய பாடம்
நான் அமர்ந்திருந்த இடம்
பார்த்து ரசித்த முகம்
ஓடி விளையாடிய மைதானம்
இவை எல்லாம் என் மனதில் அழியாத பொக்கிஷம்!!!!!!!
என் அறிவை வளர்க்க சிறந்த இடமாக
எதிர்காலத்திற்கு நல்ல ஆரம்பமாக
மனதிலிருந்து என்றும் நீங்காத
சுகமான நாட்கள் என் கல்லூரி நாட்கள் !!!!!!!!
வகுப்பறையை விட அதிகம் விரும்பிய இடம்
என் கல்லூரி உணவகம்
உணவை ரசிக்க ஆரம்பித்த இடம்
மீண்டும் கிடைக்காத வரம் என் கல்லூரி உணவு!!!!!!!!!!!
நான்கு வருட இன்ப வாழ்வில்
அறிமுகம் பெற்றேன் முதலாண்டில்
நட்பினை உணர்ந்தேன் இரண்டாமாண்டில்
மகிழ்ந்து திரிந்தேன் மூன்றாமாண்டில்
பிரிவினை சந்தித்தேன் நான்காம் ஆண்டில்!!!!!!!!!!
கல்லூரி பேருந்தில் உறங்குவது
நண்பர்களின் பிறந்தநாள் கொண்டாடுவது
தேர்வுக்கு இரவில் விழிப்பது
வகுப்பறையில் அரட்டை அடிப்பது
மறக்க முடியாது மரணம் வரை!!!!!!!!!!!
நாட்கள் நகர்ந்து விட்டது
மிகுந்த வேலையில் நேரம் கழிகிறது
நண்பர்களை சந்திக்க மனம் ஏங்குகிறது
நெஞ்சில் நினைவுகள் மட்டும் நீங்காமல்!!!!!!!!!!!!!!
நன்றி
மோ.ஆஷா ராணி
( Aen Uyir Thozhi )
( Aen Uyir Thozhi )
1 comments:
Write commentsliked that photo v much dear...
Replyhope our builders team will stand till all our life ends...!!!!!!!
Please Leave your Comments here after reading...